சர்வதேச சக்திகளின் பொறிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது சிக்கியுள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
“ விஜயதாச ராஜபக்சவும் அமைச்சர், நிமல் சிறிபாலடி சில்வாவும் அமைச்சர். கட்சி என்ற ரீதியில் எடுத்துகொண்டால் நிமல் சிறிபாலடி சில்வாவே சிரேஷ்ட உறுப்பினர். எனவே, விஜயதாசவை இணைப்பதற்கும், நிமல் தரப்பை மைத்திரி எதிர்ப்பதற்கும் உள்ள காரணம் புரியவில்லை.” எனவும் தயாசிறி குறிப்பிட்டார்.
அதேவேளை, “ மைத்திரிபால சிறிசேன தற்போது நன்றாகவே இறுகியுள்ளனர். எனவே, நாட்டில் இருந்து தப்பிச்செல்லக்கூடும், வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் கோர முயற்சிக்கக்கூடும், எனவே, பாதுகாப்பு கவசமொன்றை ஏற்படுத்திக்கொள்ளவே விஜயதாச தரப்பை அணுகியுள்ளார்…” எனக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு,
“எனக்கு அது பற்றி சொல்ல முடியாது. பல பிரச்சினைகள் இருக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தீர்வை தேடக்கூடும். சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் பூகோல அரசியலும் உள்ளது.” –என்று தயாசிறி ஜயசேகர பதிலளித்தார்.
