சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி: லக்ஸ்மன் கிரியெல்ல

இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோர், இலங்கையின் நிதி நெருக்கடிகளை வெற்றிக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இது தொடர்பில், நாளையதினம் நாடாளுமன்றில் தெளிவுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles