சர்வதேச நீதிகோரி கையெழுத்து போராட்டம்!

செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்தப் போராட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கமைவாக வவுனியா – இலுப்பையடிப் பகுதியியிலும் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது  நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சர்வதேச நீதி கோரி கையொப்பம் இட்டனர்.

Related Articles

Latest Articles