சர்வதேச நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கிழக்கிலும் ஆரம்பம்!

சர்வதேச நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கில் யாழ்ப்பாணம் – செம்மணியில் நடைபெற்று வரும் நிலையில், கிழக்கில் அம்பாறை – திருக்கோவில், தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாகவும் அந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழின அழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles