சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் திரண்ட உறவுகள்

நீண்ட காலமாகத் தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி கோரிய போராட்டம் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன், வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

 

Related Articles

Latest Articles