சர்வதேச பட விழாவில் ‘OH MY கடவுளே’

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடித்து கடந்த பெப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ஓ மை கடவுளே.

இதில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் வந்தார். காதல் நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது. அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.

கொரோனா ஊரடங்கில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஓ மை கடவுளே படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிவில். ‘ஒ மை கடவுளே’ படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருந்தது. அசோக் செல்வன் இயல்பாக நடித்துள்ளார். திரைக் கதை சிறப்பாக இருந்தது” என்று கூறியிருந்தார்.

தெலுங்கிலும் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்த நிலையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஓ மை கடவுளே படம் தேர்வாகி உள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதவரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. ஏற்கனவே கார்த்தியின் கைதி படத்தையும் டோரன்டோ பட விழாவில் திரையிட தேர்வு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles