மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இதுவரை 90 ரி-20 போட்டிகளில் விளையாடி 1,245 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், 78 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,200 ஓட்டங்களையும், 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2,968 ஓட்டங்களை பெற்றுள்ளது. அத்துடன், 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், 38 வயதான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாகும்.
