பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.
இத்தாலியில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றில் ஆரம்ப உரை நிகழ்த்துவதற்காகவே பிரதமர் அங்கு செல்கின்றார் எனவும், இதன்போது முக்கியத்துவம்மிக்க இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்தவாரம் குறித்த சர்வதேச மாநாடு ஆரம்பமாகவுள்ளது.