சர்வதேச ரீதியில் தகவல் தொழில்நுட்ப கோளாறு

பாரிய தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள், விமானசேவைகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலும் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.

அத்துடன், லண்டனின் பங்குசந்தை செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமானசேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன, வணிக வளாகங்களின் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.

செயல் இழப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின் இயக்க முறைமைகளே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செயல் இழப்புக்கு சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிரவுட் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக பேச்சாளர் , சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமைக்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles