சர்வதேச விசாரணை பற்றி அமைச்சரவையில் ஆராய்வு

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதில் பிரச்சினை இல்லை, இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு உரிய தீர்மானம் எடுக்கப்படும்.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் -4 அலைவரிசை வெளியிட்டுள்ள காணொளி மற்றும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்டவர்களை கண்டறிவதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கத்தோலிக்க திருச்சபையும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்நிலையிலேயே சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு அரசு தயார் என்ற விடயத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

” சர்வதேச விசாரணை கோரிக்கை தொடர்பில் நாமும், ஜனாதிபதியும் அமைச்சரவையில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்போம், சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கலாம், எவராவது தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles