சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் நாளை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று தமது நியமனக் கடிதம் மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் K.D.S.ருவன் சந்திர தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, நாளைய தினம் பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு போதிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

Latest Articles