மோசமான, அருவருக்கத்தக்க வேலைகள் மூலம் சம்பாதிக்கும் மக்கள் மற்றும் அது என்னென்ன வேலைகள் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
நாம் சிறுவயதாக இருக்கும்போது நகத்தை கடிக்காதே, மூக்கில் விரலை விடாதே என நமது பெற்றோர்களை நம்மை திட்டுவதை கேட்டிருப்போம். நமது உடலின் நன்மைக்காக நாம் இதுப்போன்ற பழக்கங்களை விடுவது அத்தியாவசியமாகிறது.
பொதுவாக சமூகத்தில் உள்ளவர்கள் இதுப்போன்ற பழக்கங்களை நம்மிடத்திலே காணும்போது அவர்கள் நம்மீது அருவருப்பு கொள்ள வாய்ப்புள்ளது. வீட்டில் கண்டிப்பதாலும் சமூகங்கள் வெறுப்பதாலும் இப்படியான அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்களில் இருந்து நாம் வெளியே வந்து விடுகிறோம்.
ஆனால் அப்படியான உடலுக்கு கேடுத்தரும் பழக்கவழக்கங்களை நாம் மேற்க்கொள்வதன் மூலம் நம்மால் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறினால் அது எப்படி இருக்கும். அப்படியாக கேடுத்தரும் பழக்கவழக்கங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் 10 வழிகளைதான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
10. நோய் பாக்டீரியா
டி.சிப்சைல் என்னும் பாக்டீரியா அமெரிக்க மக்களில் சராசரியாக அரை மில்லியன் மக்களை பாதிக்கிறது. வயிற்றுப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை இந்த பாக்டீரியா பரவியதன் அறிகுறி ஆகும். இது தீவிர நிலையை அடையும்போது மக்களின் உயிரையே பாதிக்க கூடும்.
பாக்டீரியாவை அழிக்கும் ஆண்டிபயாட்டிக் கொண்டு இவற்றை அழிக்கலாம். ஆனால் நமது உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உள்ளன. இந்த ஆண்டிபயாட்டிக் மருந்துகள் அவற்றையும் அழித்துவிட்டால் அதனால் மேலும் பிரச்சனை அதிகமாகும்.
வயிற்று சம்பந்தமான அறுவை சிகிச்சையின்போது கூட 2000 வகை பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. அதில் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் சி.டிப்சைல் நிரந்தரமாக அழிக்கமுடியாத கடினமான பாக்டீரியா ஆகும். சில சமயங்களில் இந்த பாக்டீரியா அதிகமான அளவு பரவி வடுவதால் அதை தடுப்பது என்பது கடினமாகிறது.
ஆனால் இந்த பாக்டீரியாவை தடுக்க வேறு வழி உண்டு. ஃபேக்கல் மட்டர் ட்ரான்ஸ்பெலண்ட் என்னும் மலம் சார்ந்த இடம் மாற்றங்கள். நல்ல ஆரோக்கியமான உடல்நலம் கொண்ட மனிதரின் மலத்தில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வடிக்கட்டி அவற்றை ஆராய்ச்சி செய்து செய்யப்படும் மாத்திரை மூலம் டி.சிப்சைல் பாக்டீரியாவை அழிக்க முடியும்.
ஆனால் அதில் உள்ள சிக்கலே அதற்கு நல்ல ஆரோக்கியமான மனிதன் கிடைக்க வேண்டும் என்பதே. கடுமையான பரிசோதனை செய்து ஆட்களை தேர்ந்தெடுக்கும்போது ஆயிரத்தில் நான்கு பேர் மட்டுமே இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்காக இந்த நான்கு பேரும் வார சம்பளம் வாங்கி வந்தனர். நன்கொடையாளர்கள் வாரம் ஐந்து மாதிரிகளை தர வேண்டும். அதற்கு வாரத்திற்கு 250 அமெரிக்க டாலர்கள் அவர்களுக்கு தரப்படும். ஆனால் பணம் சார்ந்த விஷயம் என்று இதை அணுக முடியாது என கூறுகிறார் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் ஸ்மித்.
09.துரித உணவு மற்றும் எடை அதிகரிப்பு
செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள் 2012 ஆம் ஆண்டு மக்களுக்கு ஒரு ஆச்சர்யமான திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
அதாவது எடையை அதிகரித்து பணம் பெறும் முறை. எடை அதிகரிப்பு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். மனித உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் உபாதையை ஆராய்ச்சி செய்யவே இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தனர்.
இதில் வந்து பங்கு கொண்டவர்களுக்கு தினமும் 1000 கலோரிகள் அளவிலான உணவுகள் வழங்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் தாங்களே தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளும் நிலையில் இருந்தனர். 3 மாத காலத்தில் பங்கேற்பாளர்களின் எடையை 5 முதல் 6 சதவீதம் அதிகமாக்கினர்.
இதற்காக அவர்களுக்கு 3500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு இது எளிதான விஷயமாக தோன்றினாலும் இதில் பங்கேற்றவர்களுக்கு இந்த விஷயங்கள் சுவாரஸ்யமாக இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் முண்ணனி விஞ்ஞானியான சாமுவேல் க்ளீன் இதுப்பற்றி கூறும்போது “இது அவர்களுக்கு சுவாரஸ்யமாக இல்லை. போக போக உடல் பருமன் அதிகரிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்” மேலும் சோதனையின் போதே ஒருவர் தன்னால் மூச்சு விட முடியவில்லை என கூறியதாக அவர் கூறுகிறார்.
08.புது வகை வித்தை
19 ஆம் நூற்றாண்டு பிற்பகுதி காலக்கட்டத்தில், ஜோசப் புஜோல் என்றொரு சிறுவன் இருந்தான். அவன் நீச்சல் விளையாட்டில் திறமையானவனாக இருந்தான். ஆனால் அவன் நீச்சல் பயிற்சி செய்யும்போதெல்லாம் அவன் குடலுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு ஏற்பட்டது.
இதனால் பீதியடைந்த அவன் தனியாக சென்று பார்த்தப்போது ஒரு லிட்டர் அளவிலான நீர் அவனது பின்பகுதியில் இருந்து ஊற்றுவதை கவனித்தான். இதை பற்றி அறியாத அவனது மருத்துவர் ஒன்றும் கூறாததால் அதை அந்த சிறுவனும் காலபோக்கில் மறந்து போனான்.
சில நாட்களுக்கு பிறகு ஜோசப் ஒரு விஷயத்தை கண்டறிந்தார். மூக்கின் மூலம் காற்றை இழுப்பது போல அவரது பின்பகுதி வழியாகவும் நீர் மற்றும் காற்றை இழுக்கும் சக்தி அவருக்கு இருந்தது. இதனால் தனது திறமையை அவர் வளர்க்க துவங்கினார்.
லி பெட்டோமெனே என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு அவர் ஒரு நிகழ்ச்சியை துவங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் செய்யும் செய்யும் ஒவ்வொரு விஷயமும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அவர் தனது பின்பக்கத்தை கொண்டு பல வித்தைகளை செய்து காட்டினார். ஒரே நேரத்தில் இரண்டு சிகரெட்டுகளை புகைப்பார். அந்த நிகழ்ச்சியின் இறுதியாக அவர் ஒரு குழாயை பயன்படுத்தி ஒக்கேரினா என்னும் வாத்தியத்தில் பிரபல இசைகளை தனது பின்புறத்தை கொண்டே வாசித்தார்.
07.அதிகமாக சாப்பிடுவது
மனிதர்கள் எல்லோரும் சுவையான உணவுகளை அதிகமாக நேசிக்கிறோம். பிடித்த உணவுகளை மட்டும் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுகிறோம். அளவுக்கதிகமாக உணவுகளை சாப்பிடும்போது அது சில நேரங்களில் வயிற்றுபோக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோம்பல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதிக உணவு உண்பவர்கள் அதிகப்பட்சம் சோம்பலுக்கு உள்ளாகுகின்றனர்.
ஆனால் எல்லோருக்கும் அப்படி நிகழும் என கூறிவிட முடியாது. அப்படி ஒரு மனிதர் தான் ஜோயி செஸ்னட். இவர் அதிக உணவு உண்ணும் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவதையே வேலையாக கொண்டவர்.
38 நிமிடத்தில் 32 டபுள் பாட்டி ஹாம் பர்க்கர் சாப்பிடுவது, 10 நிமிடத்தில் 78 ஹாட் டாக் சாப்பிடுவது, 12 மணி நேரத்தில் 413 சிக்கன் விங்ஸ் (கோழியின் கைப்பகுதிகளை கொண்டு செய்யப்படும் உணவு) சாப்பிடுவது, இது எல்லாம் அவரது சாதனைகள். இது இல்லாமல் உலகம் முழுக்க இவர் பல உணவு சாதனைகளை செய்து 2,18,500 அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார்.
அதிக உணவு உட்கொள்வது எளிதான காரியம் கிடையாது என்றாலும் அது ஜோயிக்கு எளிதாகவே உள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிக ஹாட் டாக் சாப்பிட்டு புதிய உலக சாதனையை இவர் படைத்தார்.
06.பணத்திற்காக ஏப்பம் விட்ட மனிதர்
ஏப்பம் விடுவது கூட உலக சாதனைகளில் இடம்பெறும் ஒரு சாதனையாகும். இதுவரை 1 நிமிடம் 13 நொடிகள் 57 மில்லி விநாடிகள்தான் அதிகப்பட்சமான ஏப்பம் விட்ட நேரமாக உலக சாதனையில் இடம்ப்பெற்றுள்ளது.
உண்மையில் ஏப்பம் விடுவது என்பது புகழ்பெற்ற விளையாட்டு ஆகும். இந்த போட்டி உலகத்தில் நமது சிறிய திறமைக்கூட நமக்கு அதிக பணத்தை ஈட்டி தர வாய்ப்புள்ளது.
ஒரு சோடா நிறுவனம் தனது விளம்பரத்தில் நடிக்க பெண்களை வேலைக்கு எடுத்தது. அந்த பெண்களுக்கு படப்பிடிப்பு காலங்களில் அதிகமாக ஏப்பம் ஏற்படும் வகையில் உணவுகள் கொடுக்கப்பட்டன. அதாவது அந்த விளம்பரத்தில் அவர்கள் ஏப்பம் விடுவதற்கு ஒவ்வொரு நடிகர்க்கும் 750 டாலர் வழங்கப்பட்டது.
05.முகப்பருக்களும் கவனிக்கப்படுகின்றன.
நமது மக்களிடையே பருக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. முகத்தில் பருக்கள் ஏற்படுவதை மக்கள் மிகவும் வெறுக்கின்றனர் அதை எப்படியாவது சரி செய்யவேண்டும் என மக்கள் சுயமாகவோ அல்லது மருத்துவரை பார்த்தோ அதற்கு தீர்வு காண்கின்றனர்.
எனவே வர்த்தக ரீதியாக பருக்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் உள்ளது. இதற்காக தனியாக வர்த்தக நிறுவனங்கள் முகத்துக்கு பூசும் க்ரீம்கள் என பணம் பார்க்கின்றனர். மற்றொரு பக்கம் தோல் மருத்துவர்களுக்கு இது அதிக பணம் சம்பாதிக்க உதவியாக உள்ளது.
அமெரிக்க மக்கள் பருக்களுக்காக மட்டும் வருடத்திற்கு 3,45,000 டாலர்களை மருத்துவர்களுக்கு வழங்குகின்றனர். தோல் மருத்துவர் சந்திரா லீ (பிம்பில் பாப்பர்) அவர்கள் முகப்பரு எப்படி உருவாகிறது என தோல் வியாதிகள் குறித்து யூட்யூபில் வீடியோக்கள் போட்ட்டு வருகிறார். அவரை மொத்தமாக 6 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.
இவ்வளவு பேர் ஏன் இதை பார்க்கிறார்கள் என அந்த மருத்துவரிடம் கேட்கும்போது “இது ஒரு மோகம் நம்மால் பார்க்க முடியாத விஷயங்களை பார்க்க மக்களுக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் இருக்கும்” என்கிறார். இப்படியாக நாம் அருவருப்பாக வெறுக்கும் முகப்பரு வர்த்தக ரீதியாக நல்ல காசு பார்க்கும் தொழில்களை உருவாக்கி உள்ளன.
04.எச்சில் துப்ப காசு
ஆராய்ச்சியாளர்கள் மரபணு சோதனை செய்யும்போது சில் முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்கின்றனர். முதலில் நோய் உள்ளவர்களை கண்டுப்பிடிக்க வேண்டும். பிறகு நோய் உள்ளவர்கள் டி.என்.ஏ வையும் நோய் இல்லாதவர்கள் டி.என்.ஏ வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
ஒருவரின் பரம்பரையை கண்டுப்பிடிக்க இந்த டி.என்.ஏ சேகரிப்புகள் பெரிதும் உதவியாக உள்ளன. இதனால் மக்கள் டி.என்.ஏ வை சேமித்து வைப்பது அவசியமாகிறது. ஆனால் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களின் டி.என்.ஏ வையும் சேமித்து வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
மக்களும் தங்கள் வேலைகளை விட்டு விட்டு இலவசமாக தங்கள் டி.என்.ஏ வை கொடுக்க முன்வரமாட்டார்கள்.
இந்த சிக்கலுக்கு ஜெனோஸ் மற்றும் டி.என்.ஏ சிம்பிள் எனும் நிறுவனங்கள் விடை கண்டுப்பிடித்தன. இவர்கள் நீங்கள் எச்சில் துப்புவதற்கு பணம் கொடுக்கிறது. ஏனெனில் எச்சிலில் உள்ள டி.என்.ஏ மூலம் நமது டி.என்.ஏ வை கணக்கிட முடியும். அது சில சமயங்களில் விஞ்ஞானிகளுக்கு உதவும் டி.என்.ஏ அமைப்பாக கூட இருக்கலாம்.
எனவே எச்சில் துப்ப 50 டாலர்கள் வழங்கியது அந்த நிறுவனங்கள். ஒருவேளை விஞ்ஞான ஆய்வுக்கு தேவையான டி.என்.ஏ அமைப்பை ஒருவர் கொண்டிருந்தால் அவரது டி.என்.ஏ மேலும் தேவைப்படலாம். எனவே அவர்களுக்கு 50 முதல் 200 டாலர்கள் வரை வழங்கப்பட்டன.
டி.என்.ஏ பாதுக்காக்கும் பல கம்பெனிகள் புதிதாக உருவாகி 2,00,000 டாலர்கல் வரை கடன் வாங்கியுள்ளனர். இதுக்குறித்து ஜெனிட்டிக் அலையன்ஸ் நிறுவனத்தின் சியூஓ கூறும்போது “இந்த டி.என்.ஏ ஆய்வை சிலர் மோசாமானதாக கருதுகின்றனர். ஆனால் அது ஏற்கனவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. உண்மையில் எங்கள் மூலம் பலர் பணம் சம்பாதிக்கிறார்கள்”. இவ்வாறு அவர் கூறினார்.
03.சிறுநீர் கழிப்பதை பற்றி கூறினால் காசு.
சாதரண வாழ்க்கையில் அனைவரும் குளியலறை கழிவறைகளை பயன்படுத்துகிறோம். வீட்டில் இருக்கும்போது கழிவறைகளை பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் ஒரு நகரத்திற்கோ மக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கோ போகும்போது நமது அத்தியாவசிய தேவைக்கு ஒரு கழிவறையோ அல்லது குளியலறையோ இல்லாமல் போனால் அது நம்மை மிகவும் கஷ்ட்டமான நிலைக்கு ஆளாக்கிவிடும்.
இதனால் கட்டணத்துடன் கூடிய கழிவறைகள் குளியலறைகள் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்கு நாம் அவர்களுக்கு பணம் தர வேண்டும். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் நமது கழிவறை சென்று வந்தது குறித்து கூறுவதற்கு காசு தருகிறது.
டாய்லெட் ஃபைன்டர் எனும் ஆண்ட்ராய்ட் ஆப் நகரத்தில் கழிவறைகள் எங்கே உள்ளன என நமக்கு காட்டும். அதே சமயம் நீங்கள் செல்லும் கழிவறையில் உங்கள் அனுபவத்தை கேட்கிறது. அந்த கழிவறை சுத்தமாக இருந்ததா? நமக்கு திருப்திகரமாக இருந்ததா? என்று கேட்கிறது. இதற்கு பதில் அளிப்பவர்களுக்கு ஒரு தொகையை பரிசாக கொடுக்கிறது.
ஒரு மதிப்புரைக்கு 20 டாலரோ அல்லது வாரத்திற்கு 100 டாலர் என்றோ அது பணத்தை கொடுக்கிறது. எழுத்தாளர்கள் இதுக்குறித்து கூறும்போது “நமது கழிவறை அனுபவம் பற்றி கூறுவதில் என்ன தவறு இருக்கிறது” என கூறுகின்றனர்.
வருங்காலத்தில் ஜிபிஎஸ் மூலம் நாம் இருக்கும் இடத்தை வைத்தே நமக்கு கழிவறைகள் இருக்கும் இடத்தை காட்டும் தொழில்நுட்பமும் வரலாம்.
02.வாந்தி எடுத்து பணம் சம்பாதிக்கும் மனிதன்
நம்மில் யாரும் வாந்தி எடுக்க விரும்பமாட்டோம் ஏன் எனில் அது ஒரு கேவலமான உடல் செயல்பாடாக பார்க்கப்படுகிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இது வெறுக்கப்படும் ஒன்றாகும். உள்ளே செல்லும் உணவு அதே வழியில் திரும்ப வருவது வாந்தி என அழைக்கப்படுகிறது.
ஆனால் ஒரு மனிதர் சிறு வயதிலேயே நாணயங்களை வாயில் போட்டு விழுங்கிவிட்டு அதை திரும்ப வெளியில் கொண்டு வந்தார். பின்புதான் அவருக்கு தெரிந்தது அவர் எதை விழுங்கினாலும் திரும்ப வாய் வழியாக அதை வெளியே எடுக்க முடியும்.
அவரது அந்த தனி திறமையை பயன்படுத்தி அவர் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினார். நம்மூர் சாமிகள் வாய் வழியே லிங்கம் எடுப்பது போன்ற யுக்தி அது. அவர் பெயர் ஸ்டிவி ஸ்டார். உலக புகழ்பெற்ற அமெரிக்கா காட் டேலண்ட் என்னும் நிகழ்ச்சியில் அவர் தனது திறமையை காட்டினார்.
அவர் சிறிய விளக்குகள், நாணயங்கள், மற்றும் பந்துகளை விழுங்கி திரும்பவும் வாய் வழியே வெளியே கொண்டு வந்தார். ஆனால் அவர் உச்சக்கட்டமாக சில விஷயங்களையும் செய்தார். முதலில் ஒரு கப் சர்க்கரயை சாப்பிடுவார். பிறகு ஒரு தம்ளர் தண்ணீர் குடிப்பார். அதன் பிறகு அவர் சர்க்கரையை மட்டும் தனியாக துப்புவார்.
சில நேரங்களில் உயிருள்ள ஜீவன்களையும் அவர் முழுங்கு உள்ளார். அதாவது ஒரு உயிருள்ள மீனை விழுங்கி அதை மீண்டும் உயிருடனே வெளியே எடுப்பார். வாந்தி எடுப்பதையும் மக்கள் ரசித்து பார்க்கும்படி ஸ்டிவி ஸ்டார் செய்தார். அதில் வருமானமும் கண்டார்.
அவர் பத்து நாணயங்களை தொடர்ச்சியாக விழுங்கி அதை வெளியே எடுப்பார். அதே அளவு அவர் அதிக பணங்களையும் சம்பாதித்தார்.
01.தொழில்முறை விரல் நக்கி
கன்னியமான ஒரு பகுதியில் உணவை உண்டுவிட்டு விரலை நக்கினால் அது நமக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் அநாகரிக செயலாக இருக்கும். ஆனால் ஒரு நிறுவனம் “பிங்கர் லிக்கிங் குட் சிக்கன்” என்னும் விளம்பரத்தை உருவாக்க திட்டமிட்டது. அதற்கு தொழில் முறையாக நன்கு விரல்களை நக்க தெரிந்த ஆட்கள் அவர்களுக்கு தேவைப்பட்டது.
ஒருவர் கோழிக்கறியை தின்றுவிட்டு விரலை நக்குவது போன்ற விளம்பரத்தை அந்த நிறுவனம் உருவாக்க நினைத்தது. ஆனால் யோசித்து பாருங்கள் ஒருவேளை நாம் அந்த விளம்பரத்தில் இருந்தால் நாம் கறியை தின்றுவிட்டு விரலை நக்குவது போன்ற புகைப்படம் பொது இடங்களில் காணப்படுவது நமக்கு அவ்வளவு இனிமையாக இருக்குமா?.
இப்படியாக நாம் அருவருக்கத்தக்கதாக நினைக்கும் பத்து விஷயங்களை வைத்து கூட உலகில் பணம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.