மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு தொலைக்காட்சியும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சியும், 30 ஆயிரம் ரூபா பணமுமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என வீட்டு உரிமையாளர் நேற்று மாலை பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த (5) ஆம் திகதி தனது உறவினர் வீட்டில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று நேற்று (8) திகதி மாலை வீட்டுக்கு வந்த வேளை
தனது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததாகவும் உள்ளே சென்று பார்த்த போது தொலைக்காட்சி மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்ததாகவும் அதன் பிறகு மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நிருபர் – ஞானராஜ்










