மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் பிரதேச மக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் பார்வை இட்ட பின்னர், மனித எச்சங்கள் டிஎன்ஏ பரிசோத உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட பிரதேச மக்கள்,
” கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அதே தோட்டத்தை சேர்ந்த 70 வயதான கிட்ணசாமி கிருஷ்ணசாமி காணாமல்போய் உள்ளனர். இது அவரின் உடல் பாகமாக இருக்கலாம்.” என சந்தேகம் வெளியிட்டனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்