மஸ்கெலியா, சாமிமலை – ஸ்டொக்ஹோம் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேயிலை தொழிற்சாலை முன்பாக ஒன்றுகூடிய தொழிலாளர்கள், வெளிக்கள உத்தியோகத்தரை உடன் இடமாற்றுமாறு வலியுறுத்தினர்.
” கடந்த மாதம் தொழில் பிணக்குகள் சம்பந்தமாக ஹட்டன் தொழில் ஆணையாளர் நாயகம் முன்பாக நடைபெற்ற பேச்சின்போது தோட்ட முகாமையாளர், நூத்தி பிரிவில் உள்ள வெளிக்கள உத்தியோகத்தரை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தார்.
அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் இடம்பெற்றது. ” – எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
