சாராவை கண்டுபிடிக்க வேண்டியது மிக முக்கியம் – முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்து

21/4 தாக்குதலுடன் தொடர்புடைய சாரா உயிருடன் இருக்கிறார். ஆணைக்குழுவும் இதனை கூறியுள்ளது. எனவே, சாராவை கண்டுபிடிப்பது மிக முக்கியமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதலின்போது சாரா சாய்ந்தமருதில் இருந்துள்ளார். அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தின் பின்னர், சாராவின் குரலை தான் கேட்டதாக சஹ்ரான் மனைவி சாட்சியமளித்துள்ளார். அதேபோல சாராவை தலைமன்னார்வரை கொண்டுசென்ற பொலிஸ் அதிகாரி தற்போது சி.ஐ.டி. காவலின்கீழ் உள்ளார். சாரா உயிருடனேயே இருக்கிறார். உயிரிழந்தவர்களின் உடல் கூற்றுடன் சாராவின் தாய்க்கு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் சாரா உயிரிழந்துவிட்டார் என்பது உறுதியாகவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இது பற்றி குறிப்பிடப்படவுள்ளது.

சாரா இந்து மதத்தை சார்ந்தவர். பின்னர்தான் இஸ்லாம் மதத்தை தழுவி தற்கொலை குண்டுதாரி ஒருவரை திருமணம் முடித்துள்ளார். ஆக சாராவை சஹ்ரான் குழுவுக்குள் அனுப்பியது யார்? அவர் மட்டும் எப்படி தப்பித்தார் என்பது உள்ளிட்ட உண்மை கண்டறியப்படவேண்டும். சஹ்ரான் குழுவை யாரோ வழிநடத்தியுள்ளனர். அது உட்பட அனைத்து காரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles