சிக்கியது 30 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அரிசி மூட்டைகளில் இருந்து 25 கிலோ ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைத்து குறித்த ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Related Articles

Latest Articles