சிம்புவை தொடர்ந்து தனுஷுடன் சங்கமிக்கும் ‘குட்டி குஷ்பு’

சிம்புவுடன் இணைந்து மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் இரண்டு ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles