சிரியா மீது 2 நாட்களில் 500 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

சிரியாவில் உள்ள ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 தடவைகள் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் திகதி முடிவுக்கு வந்தது. சிரியா ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் முப்படைகளும், சிரியாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைக் கிடங்குகள், விமானப்படை தளங்கள், டமாஸ்கஸ், ஹாம்ஸ் மற்றும் லதாகியா ஆகிய இடங்களில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றை குறிவைத்து 480 தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு மேலாக நடத்தின.

இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் 15 போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்த இந்த தாக்குதல் நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்டன், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலையற்ற தன்மையை, தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி கொள்வதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles