சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. பாரதி காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளர்
இரா. பாரதி காலமானார்!

இலங்கையில் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார்.

சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக அச்சு ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்ட இராஜநாயகம் பாரதி ‘தினக்குரல்’ பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் ஆசிரியராக பதவி வகித்துள்ளார்.

உயிரிழக்கும்போது இராஜநாயகம் பாரதி ‘வீரகேசரி’யின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்த அரசியல் ஆய்வாளராகவும் அவர் திகழ்ந்தார். நீதிக்காகவும், அநீதிக்கு எதிராகவும் எழுத்தாயுதம் ஏந்தி போராடிய ஒரு ஊடகப் போராளியாக இன்றளவிலும் அவர் போற்றப்படுகின்றார்.

Related Articles

Latest Articles