சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ. கானமயில்நாதன் இன்று காலை காலமானார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942 ஆம் ஆண்டு பிறந்த அவர், 1985 ஆம் ஆண்டு முதல் உதயன் நாளிதலின் பிரதம ஆசிரியராக செயற்பட்டுவந்தார்.
இறுதி மூச்சு இருக்கும்வரை ஊடகப்பணியில் ஈடுபட்டார். போர் காலத்திலும் – நெருக்கடியான – சூழ்நிலைகளில் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் எழுத்தாயுதம் ஏந்தி நீதிக்காக போராடினார். இதற்காக சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.
அவரின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.
