முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னிலையாகப்போவதில்லை என ரணில் மற்றும் சந்திரிக்கா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தவில்லை.