சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள சில எஜமான்களும், முதலாளிகளும் தற்போது அவர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒளித்து வைத்துள்ளனர் என பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு நகரில் சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ளவர்களை கண்டறிவதற்காக விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கொழும்பில் நேற்று முன்தினம் 30 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. எனினும், எவரும் சிக்கவில்லை.
சிறார்கள் தொடர்பில் தேடுதல் நடைபெறவுள்ளது என வெளியான தகவலையடுத்தே அவர்களை வீட்டு உரிமையாளர்களும், வர்த்தகர்கள் சிலரும் ஒளித்து வைத்திருக்க கூடும் என கூறப்படுகின்றது.
எனினும், மேற்படி வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸாரின் கழுகுப்பார்வை தொடர்கின்றது.