சிறுத்தை புலி தாக்கியதில் தொழிலாளி படுகாயம் !

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட 05ம்
இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை புலி தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

05ம் இலக்க தேயிலை மலையில் பதுங்கியிருந்த சிறுத்தை புலியே
தாக்கியதாகவும், சிறுத்தை புலி ஆறு அடிநீளம் கொண்டதாக சம்பவத்தை
பார்வையிட்ட தொழிலாளர் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான ஆண் தொழிலாளி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தயசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.

Related Articles

Latest Articles