சிறுவர் இல்லத்தின் காவலாளி கழுத்து வெட்டப்பட்டு கொலை!

கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் சிலர், திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகப் பொரலஸ்கமுவ பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்றிருந்தபோது சிறுவர் இல்லத்தில் உள்ள கிணற்றிற்கு அருகில் வைத்து காவலாளியின் சடலத்தைக்  கண்டுபிடித்துள்ளனர்.

காவலாளி உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles