சிறைக்குள்ளும் வேலையைக்காட்டிய திலினி- வெளியான திடுக்கிடும் தகவல்

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறியே இந்த கையடக்கத் தொலைபேசியை அவர் பெற்றுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்படி கைதிக்கு இந்த கைத்தொலைபேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, திலினி பிரியமாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் இதுவரை அளிக்கப்பட்டுள் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles