பேலியகொடை கலு பாலத்திற்கு அருகில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
32 வயதான ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
வீட்டிலிருந்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் சிறையில் இருந்து கடந்தவாரமே , பிணையில் வீடு திரும்பியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
