சிறைச்சாலையில் அட்டகாசம் – உடன் பதவி நீக்கவும்! சஜித் வலியுறுத்து!!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அநாகரீகமாக நடந்துகொண்ட அமைச்சரவை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சஜித்தின் முகநூல் பதிவு வருமாறு,

அனுராதபுரம் சிறைச்சா​லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன்.

Related Articles

Latest Articles