சிறைச்சாலை ஆணையாளர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அழைப்பு

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று (12) அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(12) பிற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

வட்டரெக்க சிறைச்சாலை கைதிகள் சிலர், கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles