சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல இலங்கை கடன் வலையில் சிக்கி தவிக்கிறது – உதயா

‘சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல’ நம் நாடு கடன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத அளவிற்கு படுபாதாளத்தில் விழுந்துள்ளது. கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்ததன் மூலம் சர்வதேச நிதி நிறுவனங்கள் பலவும் நமது நாட்டை தர இறக்கம் செய்துள்ளன. இது சர்வதேச அளவில் நமக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும்.

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

அவரின் இடைக்கால பாதீடுமீதான உரை வருமாறு ,

நாட்டுக்கு இவ்வாறு அவமானம் ஏற்பட என்ன காரணம், யார் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக. கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து, ஆட்சிபீடம் ஏறி பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு

பெரும்பான்மை பெற்று, இருபதாவது திருத்தச்சட்த்தின் ஊடாக அதிகாரத்தை அதிகரித்துக்கொண்ட,   அரசாங்கம் முன்னெடுத்த தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே நாட்டின் இன்றைய நிலைமைக்கு முக்கிய – முழு காரணம்.

தமது வியாபார நண்பர்களுக்கு கோடிக் கணக்கில் லாபம் பெற்றுக் கொடுத்து, அதில் பங்குகளை பகிர்ந்து கொண்டதன் காரணமாக, நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் டொலர்களை இழக்க நேரிட்டது.

குறிப்பாக, சீனி இறக்குமதி மாபியா, ரெபிட் என்டிஜன் இறக்குமதி மாபியா, தடுப்பூசி இறக்குமதி மாபியா, உர இறக்குமதி மாபியா, எண்ணெய் இறக்குமதி மாபியா போன்ற பல மோசடி வர்த்தக நடவடிக்கைகள் டொலர் இழப்பிற்கு வழிவகுத்தன.

அதுபோல, நாளுக்கு நாள் வரையறை இல்லாமல் பணம் அச்சிட்டு, பணவீக்கத்தை அதிகரித்து

நாட்டின் ரூபா பெறுமதியை வீழ்ச்சி அடைய செய்ததுடன்,  பணம் அச்சிடுவதையே ஒரு வேலையாக செய்து சாதனை படைத்தனர்.

மேலும், வருமான வரி வரையறை மாற்றம் மற்றும்  VAT வரியை8  8 % சதவீதமாக குறைத்ததால் திறைசேரிக்கு வரவிருந்த வருமானம் இழக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வெறும் வாக்குகளை மாத்திரம் இழக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால் நாடு பல இழப்புகளை சந்திக்க நேரிட்டது

“டொலர் பற்றாக்குறையுடன்” உருவான பொருளாதார நெருக்கடி, இன்று நாட்டு “மக்கள் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளது. “

இரசாயன உர தடையுடன், சேதள பசளை முறையை தீடிரென உடனடியாக அறிமுகப்படுத்தியது வரலாற்று தவறாகும்

இந்த நிலையில் ஜனாதிபதி அவர்கள் இடைக்கால வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன் மொழிந்துள்ளார்.

அந்த யோசனைகளில் பல நல்ல திட்டங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால், அவற்றை எவ்வாறு செயற்படுத்தப் போகிறார்? அதற்கான நிதிமூலம் என்ன? முன்மொழிவுகளின் சாத்தியப்பாடு போன்றவை குறித்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ‘கள்வர்கள் கூட்டத்தின் நடுவில் ’ நின்றுகொண்டு ஜனாதிபதி எவ்வாறு “பொலிஸ் வேலையை” செய்யப் போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

“கள்வர்களை கைது செய்து தண்டித்து முன்னோக்கி செல்வாரா? “அல்லது “கள்வர்களை காப்பாற்றி தானும் கரை சேர்வாரா?” என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும் “நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் உள்ளது.

அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிவாரண அறிவிப்புக்களை நாம் வரவேற்கிறோம். குறிப்பாக, சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தனியார் பெருந்தோட்ட மற்றும் அரச பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வெற்றுக் காணிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிக்கவென முன்வைத்துள்ள திட்டம் சிறப்பானது.

இந்த திட்டத்தில் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் அதிகம் உள்வாங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். “காணிப் பகிர்வில் அரசியல் தலையீடுகள் இன்றி, நியாயமான வழிமுறை கையாளப்பட வேண்டும். “ கள்வர்களின் கையில் இந்த  பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

ஊழல் ஒழிப்பு, பொருளாதார மறுசீரமைப்பு, அரச ஊழியர்கள் மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, வருமான அதிகரிப்பு வழி, அரச சொத்து பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளுக்கு குழு நியமிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் தூர நோக்குடைய திட்டங்களை வரவேற்கும்

அதேவேளை, “திருடன் கையில் சாவி சென்றுவிடாமல்” ஜனாதிபதி அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, உணவு பற்றாக்குறை எற்பட்டுள்ளது. பணவீக்கம் 67%, உணவிற்கான பணவீக்கம் 94%

நாட்டில் இன்று அத்தியாவசிய பொருட்களின் “விலை வானத்தை நோக்கி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்கிறது..

கோதுமை மா 350 பாண் 300 முட்டை 60

நாட்டில் 10 இல் 7 பேர் அல்லது 70% சதவீதமானேர் தமது உணவு வேலையை குறைந்துள்ளனர் அல்லது உணவின் அளவை குறைத்துள்ளனர்

வரிகளை அதிகரித்து மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தாது நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் “நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு உள்நாட்டு வெளிநாட்டு நிதி மற்றும் இதர உதவிகளை பெற முடியும்” என்ற யோசனையை முன்வைக்கிறேன்.

இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும என்று எதிர்ப்பார்க்கிறேன்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles