புனித சிவனொளிபாத மலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே சிவனொளிபாத மலை ஸ்ரீபாஸ்தான பிரதம குருவும் ஊவவெல்லஸ்ஸை பல்கலைக்கழக துணை வேந்தருமான பெங்கமுவ தம்மதித்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி சமய அனுஷ்டானங்களின் பின்னர் பெல்மதுளை கல்பொத்தா வலவிகாரையிலிருந்து புனித புத்தரின் சிலை மற்றும் பூஜைப் பொருட்களுடன் புறப்படும் பெரஹரா பலாங்கொடை அவிசாவளை குருவிட்ட பலாபத்தல் வழியாக சிவனொளிபாத மலை விகாரையை அடையும்.
அதன்பின்னர் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி முதல் புனித ஸ்தலத்துக்கான யாத்திரை ஆரம்பித்து மே மாதம் வெசாக் போயா தினத்துடன் நிறைவுபெறும். இக்காலப்பகுதியில் யாத்திரிகர்கள், பக்தர்கள் பிளாஸ்டிக் பொலித்தீன் பாவனையை தவிர்த்து பாதுகாப்பு சுகாதார மற்றும் ஏற்பாட்டு குழுவினருக்கு உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.