“சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம்”

இனிவரும் காலங்களில் சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின், அலவ்வ பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (20) காலை சென்று இலங்கை பொலிஸ் சார்பில் ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்கிய போது, பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அதேவேளை, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான ரொஷான் குமாரதிலக்கவின் இறுதிக்கிரியைகள் நாளை (21) நடைபெறவுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் கான்ஸ்டபிளும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles