தொழிலாள் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், 1947 இல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் சார்பில் தலவாக்கலை தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையகத்தின் மூத்த கவிஞருமான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் 40 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு வட்டகொடை மடக்கொம்புர தோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.