சிஸ்டம் சேன்ஜ் என்பதை மலையகத்தில் இருந்து ஆரம்பியுங்கள்!

நாட்டு மக்கள் வழங்கியுள்ள ஆணையைப் பயன்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அநுரகுமார திஸநாயாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது. அனைத்து இன மக்களின் ஆசியுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு மக்கள் வழங்கியுள்ள ஆணையை பயன்படுத்தி பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. நாடாளுமன்றம் தெரிவாவதற்கு பெறவேண்டிய வாக்குகளைப்பெற வில்லை என்பதே உண்மை. நான் சுமார் 20 ஆயிரம் வாக்குகளை எடுத்தேன். சில மாவட்டங்களில் 5 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றனர். இதுதான் இந்த தேர்தலை முறைமை.
அதேவேளை, சிஸ்டம் சேன்ஸ் என்பதை அரசாங்கம் மலையகத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.”- என்றார்.

Related Articles

Latest Articles