சொகுசு சுற்றுலா ரயிலான ‘சீதாவாகா ஒடிஸி’ இன்று முதல் வாராந்திர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
காலை 9.07 மணிக்கு வாகா நிலையத்தை சென்றடையும்.
மருதானை, நாரஹேன்பிட்ட, நுகேகொட, மஹரகம, கொட்டாவ, மகும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க உள்ளிட்ட பல நிலையங்களில் ரயில் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
இது மாலை 5.37 மணிக்கு புவக்பிட்டிய நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கித் திரும்பும் பயணத்தை ஆரம்பிக்கும்.
இரயில்வே திணைக்களத்தின் படி, சீதாவாக ஒடிஸி’ இரவு 8.03 மணிக்கு கோட்டை நிலையத்தை சென்றடையும்.
