சீனாமீது 104 சதவீத வரி! வாஷிங்டன்மீது பீஜிங் பாய்ச்சல்!

” சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது.” – என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவுக்கு 34 சதவீத வரி விதித்தது.

அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு தற்போது அமுலுக்கு வந்துள்ளது.

இதற்கு சீனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

‘ சீனாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. சீனா உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி வருகிறது.

சீனா உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் சராசரியாக உலகளாவிய வளர்ச்சியில் 30 சதவீதம் பங்களிக்கிறது. உலக வர்த்தக அமைப்பை பாதுகாக்க உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.” எனவும் சீனா தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles