சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் நியமனம்!

சீனாவில் புதிய பிரதமராக ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார். அவர் தனது சொந்த ஜெஜியாங் மாகாணத்தில் 40 ஆண்டுகளாக அரசியல்வாதியாக செயல்பட்டதுடன், ஜீ ஜின்பிங்கின் செயலாளராகவும் ஆனார்.

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜீ ஜின்பிங் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

3 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அவர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சீனாவின் புதிய பிரதமர் நியமனம் மற்றும் அறிவிப்பு அடுத்தடுத்து இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது

Related Articles

Latest Articles