பண்டிகைக் காலம் உள்ளிட்ட எதிர்வரும் மாதங்களுக்காக அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவிலிருந்து 10 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை கடன் உதவியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கடன் உதவி மூலம் பருப்பு மற்றும் பார்லி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மீதியான நிதியை அத்தியாவசிய பொருட்கள்கொள்வனவுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கிடைக்கவுள்ள நிதி மூலம் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் போதுமான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
