சீனாவில் கொரோனா தீவிரம் – 20 விஞ்ஞானிகள் உயிரிழப்பு

சீனாவில் மீண்டும் கொரோனா உச்ச தாண்டவமாடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சீன பொறியியல் பிரிவைச் சேர்ந்த முக்கிய பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள்  உயிரிழந்துள்ளனர்

குறிப்பாக கடந்த டிசம்பர் 15 முதல் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அதேவேளை சீனாவின் மிகவும் புகழ்பெற்ற பொறியியல் பிரிவில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இந்நிலையில் எந்தவொரு விஞ்ஞானியின் உயிரிழப்புக்கும் குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. அதேசமயம் ஒரு மாதத்துக்குள் இவ்வளவு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாகும்.

சீனாவில் கடந்த 2017-2020 ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 17 பேர் உயிரிழந்து இருந்தனர். இவ்வாறான நிலையில் ஒரு மாதத்துக்குள் 20 பேர் உயிரிழந்திருப்பது அங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Articles