சீனாவுடன் இணைந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டம்

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக சீனாவின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெனிசுலா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், சீனா உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக வெனிசுலா நாட்டில் இருந்து இளைஞர்கள் பலர் சீனாவில் பயிற்சி பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles