சீன உளவுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி?

மாலைதீவு, இந்தியாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது புதியதொரு சர்ச்சை வெடித்துள்ளது. சீனாவின் ஆராய்ச்சி கப்பலை தமது நாட்டுக்குள் மாலைதீவு அனுமதித்துள்ளது.

இந்த கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் எச்சரிக்கைகளை, கவலைகளைப் பொருட்படுத்தாமல், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீனக் கப்பலை மாலைத்தீவு தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதித்து உள்ளது.

துறைமுக பணியாளர்களை மாற்றுவதற்கும், கப்பல் சேவைக்கு மட்டும் இந்த கப்பலை உள்ளே அனுமதிப்பதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சீன கப்பல் எந்த உளவு பணிகளையும் செய்யாது என்றும் தெரிவித்துள்ளது.
எனினும், சீனாவின் உளவுக்கப்பல் மாலதீவில் இருந்து கொண்டு இந்தியாவை உளவு பார்க்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles