அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் பீஜிங்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
பைடனின் தீர்மானத்திற்காக அவுஸ்திரேலியா காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பீஜிங்கில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள போட்டிகளை புறக்கணிக்குமாறு பிரதமர் ஸ்கொட் மொறிசனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
பீஜிங்கில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா இராஜதந்திரிகளை அனுப்ப மாட்டாது எனவும் இன்டிபென்டன்ட பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.