சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த பிரதமர் நரேந்திர மோடி!

 

சீனா​வில் ட்விட்​டர், பேஸ்​புக் உள்​ளிட்ட மேற்​கத்​திய சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. உள்​நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலை​தளம் மட்​டுமே பயன்​பாட்​டில் இருக்​கிறது.

எஸ்​சிஓ மாநாட்​டில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்ற நிலை​யில் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி முதலிடத்​தில் உள்​ளார்.

இதுகுறித்து சீன அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது:

சீனா​வில் கூகுள் பயன்​பாட்​டில் இல்​லை. உள்​நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடு​தளமே பயன்​பாட்​டில் இருக்​கிறது. இந்த தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி குறித்த தகவல்​களை சீனர்​கள் அதிக அளவில் தேடி உள்​ளனர்.

மேலும் வெய்போ சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி குறித்த புகைப்​படங்​கள், வீடியோக்​கள் அதி​க​மாக பகிரப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக புதின், மோடி, ஜி ஜின்​பிங் ஒன்​றாக கலந்​துரை​யாடிய புகைப்​படம், வீடியோ அதி​க​மாக பகிரப்​பட்டு வரு​கிறது.

மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்​திர மோடி ஒரே காரில் பயணம் செய்​யும் புகைப்​படம், வீடியோ​வும் வெய்போ தளத்​தில் வைரலாக பரவி வரு​கிறது. பிரதமர் மோடி​யின் துணிச்​சலான முடிவு​கள், அவரது நடை, உடை பாவனை​கள் குறித்து சீனர்​கள் புகழாரம் சூட்டி வரு​கின்​றனர்.

ஒவ்​வொரு ஆண்​டும் எஸ்​சிஓ உச்சி மாநாடு நடை​பெறுகிறது. ஆனால் 7 ஆண்​டு​களுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா வந்​திருப்​ப​தால் இந்த ஆண்டு எஸ்​சிஓ மாநாடு உலகம் முழு​வதும் பெரும் கவனத்தை ஈர்த்​திருக்​கிறது. குறிப்​பாக அமெரிக்​கா, ஐரோப்​பிய ஊடகங்​கள் பிரதமர் மோடி சார்ந்த தகவல்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளித்து செய்​தி​களை வெளி​யிட்​டு உள்​ளன. இவ்​​வாறு சீன அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles