சீன பாதுகாப்பு அமைச்சருக்கான வாகன தொடரணி – ‘ஒலி’ எழுப்பி எதிர்பை வெளியிட்ட இளைஞன் கைது!

சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணியின்போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பை நோக்கி சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன தொடரணி வந்து கொண்டிருந்தவேளையில், பொரளையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் எடுக்கப்பட்ட காணொளியொன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles