சீமாட்டி வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 08 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.

அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் தடவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்

Related Articles

Latest Articles