சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 608 குடும்பங்களைச் சேர்ந்த 2,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருவர் காயம் அடைந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 16 வீடுகள் முழுமையாகவும், 283 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
86 குடும்பங்களைச் சேர்ந்த 295 பேர் 10 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
க.கிஷாந்தன்