பதுளை, குருணாகல் உட்பட 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 798 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுதல் போன்ற அனர்த்தங்களால் 3 வீடுகள் முழுமையாகவும், 116 வீடுகள் பகுதியவும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் 191 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 11 பாதுகாப்பான இடங்களில் அக்குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.