சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 310 குடும்பங்களைச் ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 38 வீடுகள் சேதமடைந்துள்ளன .
104 குடும்பங்களைச் சேர்ந்த 394 பேர் 5 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சீரற்ற காலநிலையில் 8 மாவட்டங்களில் 13, 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
