நாட்டில் பதுளை உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 348 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 3 வீடுகள் முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 333 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 64 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 13 பாதுகாப்பு நிலையங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.










