சீரற்ற காலநிலையால் ஐ.தே.கவின் மாநாடு ஒத்திவைப்பு

சீரற்ற காலநிலையால் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமையவே இந்த முடிவை கட்சியின் நிர்வாகக்குழு எடுத்துள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடத்தப்படவிருந்தது. மாநாடு பிற்போடப்பட்டுள்ளதால் புதிய திகதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Related Articles

Latest Articles